செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

மகளிர் தின வாழ்த்து

பெண்மைக்கு நினைவு கூறும் மார்ச் எட்டை
பெருமையுடன் போற்றுகின்றோம் மகளிர் தினத்திலே
பெற்றோமே போராடி பெண் சுதந்திரத்தை இன்னும்
பெண்ணடிமைக் கொடுமை ஏனோ ஓயவில்லையே

ஆண்மைக்கு நிகரென பெண்ணின் சமத்துவத்தைப்
பேசிவிட்டுப் போனவர்கள் உண்டேயானால் மண்ணில்
பெண்ணுக்கு அறிவோடு கல்வியும் தேவை அதைத்
தந்தால் சமுதாயத்தில் சமத்துவம்தான்...

மலரோடு யொத்தவள் பெண் என்றே பல
காவியக் கவிதைகள் சொல்லிடினும் பலர்
மலரதனை கசக்கி நுகர்ந்திடவே மண்ணில்
மாய்ந்திடும் மாந்தர் தம் நிலை என்று மாறுமோ....


பெண் பல மேன்மைகள் பெற்றிடினும் அவள்
பேச்சோடும் எழுத்தோடும் நிற்கின்றாள் என
எண்ணிடும் ஆண்கள் அவளை பேதை என்றார்
அவர்தம் பேதைமை மாறிட வேண்டாமோ...


வள்ளுவன் பாரதி கண்ட காவியப் பெண்ணே
புதுமைப் பெண்ணாய் மலர்ந்திடுவாய்
போதும் இந்த அடிமைத் தீயில் எரிந்தது
பொலிவுடன் சுதந்திரக் காற்றை சுவாசிப்பாய்.